குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.. தமிழிசை, எச் ராஜாவுக்கு ஜெ.அன்பழகன் பதிலடி!
மெர்சல் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: மெர்சல் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சனம் செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவினரின் எதிர்ப்பால் மெர்சல் திரைப்படம் எதிர்ப்பார்த்ததைவிட அதிக வசூலைக் கொடுத்துள்ளது.
அரசுக்கு எதிரான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க பாஜகவினர் கெடு விதித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் உள்ள நான்கு காட்சிகளை நீக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சலுக்கு பெருகும் ஆதரவு
படத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. படத்தின் காட்சிகளை நீக்கக்கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது.

மெர்சலுக்கு திமுக ஆதரவு
இந்நிலையில் மெர்சல் பட விவகாரத்தில் ஆரம்பம் முதலே எதிரான விமர்சனங்களை வைத்து வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.
|
ஜெ.அன்பழகன் டிவிட்
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ஜெ அன்பழகன். குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும் என கூறி அதில் தமிழிசை மற்றும் எச் ராஜா ஆகியோரின் டிவிட்டர் பக்கங்களையும் இணைத்துள்ளார்.

பாஜகவுக்கு நன்றி சொல்லனும்
மேலும் மெர்சலை நாடு முழுவதும் ட்ரென்ட் செய்த பாஜகவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் ஜெ.அன்பழகன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்ப்பால் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது இன்று பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications