கருணாஸை காவல் நிலையத்தில் நேரில் சந்தித்த திமுக எம்எல்ஏ.. பரபரப்பு!
கைது செய்யப்பட்ட முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸை திமுக எம்.எல்.ஏ. செல்வம் நேரில் சென்று சந்தித்தார்.
Recommended Video

சென்னை: கைது செய்யப்பட்ட முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸை திமுக எம்.எல்.ஏ. செல்வம் நேரில் சென்று சந்தித்தார்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் முதல்வரையே நான் அடிப்பேன் என்றும் போலீசுக்கு எதிராகவும் பேசினார் .

மேலும் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், கொலை செய்வேன் என்றும் கூட அவர் பேச்சில் சில கருத்துக்கள் இடம்பெற்று இருந்தது. இவர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டது. மொத்தம் 7 பேர் பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் நுங்கப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்த கருணாஸை, ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. செல்வம் நேரில் சென்று சந்தித்தார். போலீஸ் கைது குறித்து, வழக்கு நடவடிக்கை குறித்து இவர்கள் பேசி இருப்பதாக தெரிய வருகிறது.
காவல் நிலையத்தில் கருணாஸை சந்தித்த செல்வம் செய்தியாளர்களிடம் அதுகுறித்து விளக்கம் அளித்தார். அதில் அவர் எனது நண்பர். அந்த அடிப்படையில் மட்டுமே சந்திக்க வந்தேன். இதில் அரசியல் எதுவும் இல்லை என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications