விவசாயிகள் பந்த்துக்கு ஆதரவு... திமுக எம்.எல்.ஏக்கள் நாளை சட்டசபை புறக்கணிப்பு!
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் நாளை சட்டசபையை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
காவிரியில் புதிய அணைகள் கட்டும் கர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால், பேருந்துகள் இயக்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. பேருந்து மற்றும் ரயில் மறியல் மேற்கொள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முழுஅடைப்பு போராட்டத்தை ஒட்டி நாளை சட்டசபைக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று திமுகவின் துரைமுருகன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை முதல்வர் ஏற்கவில்லை.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் நாளை பேரவைக் கூட்டம் நடப்பதாகப் புகார் தெரிவித்தார். அனைத்து கட்சியும் விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கூட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில் துரோகம் இழைத்தது அதிமுக-தான் எனவும் துரைமுருகன் புகார் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், சனிக்கிழமை நடைபெறும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications