தெர்மாகோல்.. தெர்மாகோல்.. செல்லூர் ராஜூவை ஓட்டிய திமுகவினர்! சட்டசபையில் சுவாரசியம்!
அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் தெர்மாகோல் தெர்மாகோல் என ஓட்டியதால் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக எம்எல்ஏக்கள் தெர்மாகோல் தெர்மாகோல் என கிண்டலடித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
நீர் ஆவியாவதைத் தடுக்க திட்டமிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை ஆற்றில் தெர்மாகோலை போட்டு மூடினார். ஆனால் காற்றின் வேகத்தால் தெர்மாகோல் அட்டைகள் தண்ணீரில் போட்ட சில மணி நேரங்களிலே கரை ஒதுங்கியது.
இதனால் அமைச்சரின் திட்டம் புஸ்ஸானது. இதனை திமுக செயல்தலைவ்ர ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் விமர்சித்தனர். சமூக வலைதளங்களிலும் போதும் போதும் என நெட்டிசன்கள் வச்சு செய்து வந்தனர்.

பிரபலமான தெர்மாகோல் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த திட்டத்தின் மூலம் ஒரே நாளில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். சீன பத்திரிக்கைகளும் அமைச்சரின் திட்டத்தை மெச்சி எழுதியிருந்தன.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
இந்நிலையில் தமிழக சட்டசபை இன்று துவங்கியுள்ளது. இதில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தொடரில் கேள்வி நேரம்
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது விழுப்புரம் எம்.எல்.ஏ.,வின் கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார்.

தெர்மாகோல், தெர்மாகோல்'
அவர் பேசிக் கொண்டிருந்த போது அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் ' தெர்மாகோல், தெர்மாகோல்' என, முழக்கமிட்டனர். திமுகவினரின் இந்த கோஷத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications