திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி மரணம்: ஸ்டாலின் அஞ்சலி
திருச்சி: திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி(50) இன்று அதிகாலை 1.10 மணிக்கு மரணம் அடைந்தார்.
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி(50). மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவரை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு அவர் சென்னை கிளம்பினார்.
பின்னர் தேவிகாவின் உடல் நிலை மோசமடைந்தது. இந்த தகவல் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை கிளம்பிய அவர் மீண்டும் திருச்சிக்கே திரும்பினார்.
புற்றுநோயுடன் போராடிய தேவிகா இன்று அதிகாலை 1.10 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சிவா, தேவிகா தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications