டிவிட்டரில் நாம் தமிழர் - திமுக கடும் மோதல்... இழிவான சொற்களால் மாறி மாறி வசை!

திமுக- நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் இடையேயான சண்டையால் டிவிட்டர் சமூக வலைதளம் ரணகளமாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக- நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் இடையேயான சண்டையால் டிவிட்டர் சமூக வலைதளம் ரணகளமாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நாம்தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கருணாநிதி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடக் கூடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கண்டித்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீனதயாளன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இருக்கட்சி தொண்டர்களும் டிவிட்டர் வலைதளத்தில் ஒருவரையொருவர் இழிவான சொற்களால் வசைபாடி வருகின்றனர். அவற்றில் நாகரீகம் கருதி சிலவற்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம்.

வன்மங்கள்

நாம்தமிழர் தம்பியை கைது செய்துதான் உங்கள் வன்மங்களை தீர்த்துக் கொள்ளமுடியும் என்றால் உங்களின் போலித்தனத்தை கண்டு அது தோலுரிவதைக் கண்டு அனுதாபப்படுகிறேன்!

தூற்றலுக்கு ஓய மாட்டோம்

வரலாற்றில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின் ஆணிவேரிலிருந்து துளிர்த்து வளரும் தளிர்கள்
#நாம்தமிழர் பிள்ளைகள்
சிறு தூற்றலுக்கு ஓய்ந்து போகமாட்டோம்

கண்ணுக்கு தெரியுது

அதிமுக, பாஜக, பாமக'ன்னு எல்லாரும் பேசுறாங்க.. ஆனா நாம்தமிழர் மட்டுந்தான் கண்ணுக்கு தெரியுது!

என்ன நடவடிக்கை?

கருணாநிதி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் குடியாத்தம் தீனதயாளன் கைது
என்ன நடவடிக்கை எடுத்துருக்காரு சீமான்

எந்தக்குற்றத்துக்கும் தயங்க மாட்டார்கள்

இது எல்லாமே பொய்கள்.
பணத்திற்காகவும் பதவிக்காகவும் கூச்சமில்லாமல் பொய் சொல்லும் "நாம் தமிழர் கட்சியினர்" எந்தக்குற்றத்துக்கும் தயங்கமாட்டார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
ஆமைக்கறி கதையும், அரிசி மூட்டைக்கதையும் பேசி ஈழத்தமிழர்களை ஏமாற்றலாம், பணம் சம்பாதிக்கலாம்.

இப்படிதான் இருப்பாங்க

குடியாத்தத்தில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீனதயாளன் கைது.
வதந்தி பரப்புறதயே முழுநேர வேலையா பாக்கிறானுங்க இந்த டுமில் பசங்க.ம்ம் சைமனின் சீடன் இப்படிதான் இருப்பானுங்க..

காத்திரு பகையே

நாம் தமிழர் + பாஜக + ரஜினி ரசிகர்கள் இந்த கூட்டணியை ஒருபோதும் மறக்கமாட்டோம்.
உஙகள் வன்மம் / இழி செயலுக்கு பதில் சொல்லும் நாள் வரும்....
காத்திரு பகையே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+