சென்னையில் திமுக அலுவலகம் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல்
சென்னை: சென்னையில் திமுக அலுவலகம் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே அதிமுக வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அந்த தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள திமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக கவுன்சிலர் கந்தன் தலைமையிலான கும்பல் திமுக அலுவலகத்தின் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
இதனைஅடுத்து அப்பகுதியில் இருந்த திமுகவினருக்கு அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களால் தாக்கி கொண்டனர். அப்பகுதியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதில் திமுகவை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் வன்முறை ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications