திமுக எதிர்ப்பு விஜய் நிலைக்கு ஆதரவு- கூட்டணி கிடையவே கிடையாது..ஒரே போடாக போட்ட நாம் தமிழர் சீமான்!
திருச்சி: திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், தேர்தல் களத்தை தனியாகவே நாம் தமிழர் கட்சி சந்திக்கும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறோம் என்கிறார் சீமான்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

நான் ஆள் சேர்த்துக் கொண்டு சண்டக்குப் போகிறவன் அல்ல. பிரபாகரனை வீழ்த்த உலக நாடுகளின் படையை துணை தேடி சிங்களர் வந்தனர்; ஆனால் அத்தனை படையையும் எதிர்க்க எந்த நாட்டிடம் உதவி கோரவில்லை பிரபாகரன். அதே மரபில் என் எதிரியை நான் தனியாகவே சந்திப்பேன். ஒரு நாய், 4 நாய்களை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் சரி; ஆனால் ஒரு புலி, 10 புலிகளை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் நன்றாக இருக்காது.
தனித்து நிற்பதற்குதான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள்; தனித்து நிற்கிறோம்; மோதுகிறோம். கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை; கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபா? சட்டமா?
நாங்கள் யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டுதான் களத்துக்கு வந்தவர்கள். யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியாமல் அரிவாளை தூக்கிக் கொண்டு வீதியில் நின்று கொண்டு எவனை வெட்டலாம் என தேடவில்லை. யாரை வீழ்த்த வேண்டும் என்ற முடிவுடனேயே போருக்கு வந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அடுத்த 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி என்பது எல்லாம் தெரிந்துவிடும்.
பிரதமர் மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications