வேலூர் அருகே ஆளுநருக்கு திமுக கறுப்புக்கொடி! பரபரப்பு!
வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் மாநிலத்தின் பலப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அரசு அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில சுயாட்சி அதிகாரித்தில் தலையிடும் மத்திய அரசின் நடவடிக்கையே இது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மேலும் ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களில் தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஆய்வை கண்டித்து கறுப்புகொடி காட்டி வருகின்றன.
ஆனால் ஆளுநர் ஆய்வை தமிழக அரசு வரவேற்று வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

இதனையறிந்த திமுகவினர் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி அருகே உள்ள விருதம்பட்டில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய சென்ற ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக வினர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் தலைமையில் காட்பாடி விருதம்பட்டு அருகே 200க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
