For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றால் கிடைக்கும் வாய்ப்பை திமுக ஏற்காது!

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றால் பெரும்பான்மையை நிரூபிக்க கிடைக்கும் வாய்ப்பை திமுக ஏற்காது என கூறப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தோற்கும் நிலையில் திமுக பெரும்பான்மைய நிரூபிக்க வாய்ப்பு தரப்படலாம். ஆனால் இதை திமுக ஏற்காது என்றே தெரிகிறது.

சட்டசபையில் அதிமுக சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார். தற்போதைய நிலையில் 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

DMK to reject chance to prove majority?

பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் 117. இருப்பினும் 122 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க கூடும் என்றே கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும்.

இதையடுத்து பிரதான எதிர்க்கட்சியான திமுக பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரப்படும். ஆனால் தொடக்கம் முதலே மறுதேர்தலில் உறுதியாக இருக்கும் திமுக இந்த வாய்ப்பை நிராகரிக்கவே செய்யும் என்றே கூறப்படுகிறது.

திமுகவும் நிராகரித்துவிட்டால் சட்டசபையை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சி பிரகடனப்படுத்தப்படலாம்.

English summary
In Assembly, Edappadi Palanisamy loss majoirty, DMK will get chance to prove their Majority. But DMK will not accept this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X