"கருணாநிதி கோர்ட்டுக்கு வந்தது அரசியல் என்றால்.. ஜெ. வாய்தா வாங்கியது என்னவாம்?"
சென்னை: திமுகவின் தேர்தல் பிரசாரம் எப்போதோ தொடங்கி விட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் மதுரை போயுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அரசியல், தேர்தல் தொடர்பாக கேள்விகள் கேட்டனர்.

நாளைய சட்டசபை கூட்டத்தொடரில் திமுக முன் வைக்கும் பிரச்சனைகள் என்ன என்ற கேள்விக்கு நாளைக்கு சட்டசபை வாருங்கள். அங்கு பதில் சொல்கிறேன். நாளைய தொடரில் கவர்னர் உரை நிகழ்த்துகிறார். அதன் பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சபை கூடும் என்பதை முடிவு செய்வார்கள் என்றார்.
மதுவிலக்கை அமுல்படுத்த தொடர்ச்சியாக திமுக போராடி வருகிறதே? இதுபற்றி சட்டசபையில் குரல் எழுப்பப்படுமா என்ற கேள்விக்கு இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் படுத்த நிச்சயமாக திமுக வலியுறுத்தும் என்றார் ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி கோர்ட்டில் ஆஜரானது அரசியல் காரணத்திற்காகவா என்ற கேள்விக்கு அப்படியானால் முதல்வர் ஜெயலலிதா அவரது வழக்குகளுக்காக வாய்தா வாங்கி ஆஜரானதும் அரசியல் காரணமா? நான்கரை ஆண்டு கால அதிமுக. ஆட்சி பற்றி தலைவர் கலைஞர் எடுத்து சொன்னார். இதற்காக அதிமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்ததால் அவர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளார் என்று விளக்கினார் ஸ்டாலின்.
அதிமுக பிரசாரத்தைத் தொடங்கி விட்டது, திமுக எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு திமுக எப்போதோ தொடங்கி விட்டது என்று பதிலளித்தார் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications