வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கியது திமுக- ஃபேஸ்புக்கில் லைவ் ஒளிபரப்பு செய்த கருணாநிதி
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணலை திமுக நேற்று தொடங்கியது. 27ம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெறுகிறது. நேற்றைய நேர்காணலை சிறிது நேரம் லைவ்வாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருணாநிதி ஒளிபரப்பு செய்தார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி உள்ளிட்ட தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

பெரும்பாலான கட்சிகள் விருப்பமனுக்களைப் பெற்று விட்டன. பாமக வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் முடித்து விட்டது. தமாகா தற்போது நேர்காணல் நடத்தி வருகிறது. அதிமுக வழக்கம் போல் வேட்பாளர் பட்டியலை நேரடியாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்று திமுக நேர்காணல் தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாக 27ம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெற இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்துள்ளவர்களை திமுக தலைவர் கருணாநிதி பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினார்கள்.
முதல் நாளான நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 135 பேரிடம் நேற்று மதியம் வரை நேர்காணல் நடத்தப்பட்டது.
பின்னர் மாலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த 204 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. அத்துடன் நேற்றைய நேர்காணல் முடித்து கொள்ளப்பட்டது. இதனால், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அத்துடன் சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு நீலகிரி, கோவை, கோவை மாநகர், சேலம், திருப்பூர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் நேர்காணலில்.
Posted by Kalaignar Karunanidhi on Sunday, February 21, 2016
24ம் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, மாலை 4 மணிக்கு கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கும், 25ம் தேதி காலை 9 மணிக்கு நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், 4 மணிக்கு விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
26ம் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், 4 மணிக்கு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கும், கடைசி நாளான 27ம் தேதி புதுவை, காரைக்கால் பகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும்.
ஃபேஸ்புக்கில் லைவ்...
அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் நேர்காணலில்.
Posted by Kalaignar Karunanidhi on Sunday, February 21, 2016
இன்றைய நேர்காணலை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ்வாக கருணாநிதி ஒளிபரப்பு செய்தார். அதேபோல் புகைப்படங்களையும் உடனுக்குடன் அப்டேட் செய்திருந்தார் கருணாநிதி.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications