டீ கடையில் பேசிய அரசியலை.. இனி சோசியல் மீடியாவில் பேசுங்க.. மா.செ.க்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: டீ கடைகளில் பேசிய அரசியலை இனி சோசியல் மீடியாவில் பேச வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சோசியல் மீடியா மிகப்பெரிய களமாக உருவெடுத்திருப்பது இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின் தெரிய வந்துள்ளதாக பேசிய ஸ்டாலின், திமுகவினர் ஒவ்வொருவரும் சோசியல் மீடியாவில் நேரடியாக பங்கெடுத்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் முடிவு தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், திமுக அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம் என்று இருக்கிறேன். அந்த மாற்றம்தான், கழகத்தை இன்னும் ஒரு நூற்றாண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளப் போகிறது.

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டிய களமாக சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கிறது. திமுகவைப் போல், நம் தலைவர்களைப்போல் காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்தியவர்கள் யாரும் இல்லை. பொதுக்கூட்டம், திண்ணைப் பிரசாரம், பத்திரிகை, நாடகம், சினிமா, டி.வி. என்று கால மாற்றத்திற்கேற்ப, அனைத்து தளங்களையும் கொள்கையை விளக்கும் பிரச்சாரக் களத்தை வெற்றிகரமாக பயன்படுத்த்திய இயக்கம் திமுக.
அதனை மனதில் வைத்து கொண்டு, இனி வரும் காலங்களில் நமது பிரச்சார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள வேண்டும். டீ கடையில பேசிய அரசியலை, இனி சோஷியல் மீடியாவில் பேச வேண்டும். அதேபோல் திமுக பலவீனமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு நிர்வாகிகளுக்கு இடையிலான மோதலை நேரடியாக சென்று சரி செய்யுங்கள்.
ஒரு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் முக்கியம் தான். ஆனால் மாவட்டச் செயலாளர் மட்டுமே முக்கியமென்று ஆகிவிடக் கூடாது. ஒருவேளை யாராவது, என்னால் செயல்பட முடியாது என்று நினைத்தால், மனப்பூர்வமாக முன் வந்து விலகி கொள்ளலாம். குறி வைத்து களப்பணியாற்றினால், நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைக்க சோசியல் மீடியா பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் காரணமாக அமைந்தது. மக்களை நேரடியாக சந்திக்காமல், அவர்களின் செல்ஃபோனில் சென்று சந்திப்பது தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் திமுக சோசியல் மீடியாவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications