முதல் ‘பக்கத்தை’ப் பிடித்தது அதிமுக... கடைசி ‘பக்கத்தை’ தக்க வைத்தது திமுக.. இன்று ‘வரும் ஆனா வராது’
சென்னை: திமுக சார்பில் மூன்றாவது நாளாக இன்றும் ஊடகங்களில் ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக திமுக சார்பில் செய்தித்தாள்களில் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என்ற ஒரு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் அதிமுக அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டு ஆவேசமான அதிமுகவினரும் சமூகவலைதளங்கள் வாயிலாக திமுகவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக செய்தித்தாள்களில் கடைசிப் பக்கத்தில் திமுக சார்பில் வித்தியாசமான விளம்பரம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கம் ஸ்டைல்...
முதல் நாள் திமுக விளம்பரத்தில், ‘5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பார்த்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவில பார்த்திருப்பீங்க... நேர்ல பார்த்திருக்கீங்களா?' என சிங்கம் பட டயலாக் ஸ்டைலில் கூறப்பட்டிருந்தது. கூடவே, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..' என்ற பன்ச்சையும் வைத்து திமுகவினர் பட்டையைக் கிளப்பியிருந்தனர்.

பதிலடி...
இதைக் கண்டு பொங்கியெழுந்த அதிமுகவினர் இதற்கு பதிலடி தரும் விதமாக அவர்களும் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என விதவிதமான விளம்பரங்களை சமூகவலைதளங்களில் பரப்பினர்.

வேலை மட்டும் இல்லை...
இந்நிலையில், நேற்றும் திமுக சார்பில் ஒரு விளம்பரம் வெளியானது. அதே, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' ஸ்டைலில் இருந்த அந்த விளம்பரத்தில், ‘மண் கொள்ளை, பால் கொள்ளை, மின்சாரக் கொள்ளை, ஆனா 86 லட்சம் பேருக்கு வேலையே இல்லை. நோக்கியா பாக்ச்கான் போன்ற் அநிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியதால் 75,000க்கும் அதிகமானோர் வேலையிழப்பு' எனக் கூறப்பட்டிருந்தது.

வரும் ஆனா வராது...
அதன் தொடர்ச்சியாக இன்றும் திமுக விளம்பரம் செய்தித்தாள்களில் இடம்பிடித்துள்ளது. அதில், ‘வரும்ம்ம் ஆனா வராது... இருக்கும்ம்ம்ம் ஆனா இருக்காது. 110 விதியின் கீழ் சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் வெத்துவேட்டு. தேர்தல் வாக்குறுதியில் 80% நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் பஞ்ச்...
வழக்கம்போலவே இந்த விளம்பரத்தின் கீழும், ‘என்னம்மா இப்ப்டி பண்றீங்களேம்மா' இடம்பெறத் தவறவில்லை.

நூதன பிரச்சாரம்...
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வித்தியாசமான முறையில் இப்படி தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது.

ஏமாற்றம்...
இந்த விளம்பரங்களுக்கு பதிலடியாக நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு செய்தித்தாள்களின் முதல்பக்கத்தில் ஒருபக்க விளம்பரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அத்தகைய விளம்பரங்கள் இல்லை.

ஜெ. விளம்பரம்...
இந்நிலையில், இன்று காவல், சிறைச்சாலைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த சீருடைப் பணியாளர்களுக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கும் திட்டம் தொடர்பான விளம்பரம் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!











Click it and Unblock the Notifications