திமுக- எஸ்டிபிஐ தொகுதிப் பங்கீட்டு பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியுடன் இன்று திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தியது. இருப்பினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் திமுகவுடன் பேசுவோம் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
திமு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இக்கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.

இதில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடந் பேச்சு நடத்தி 5 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சு நடத்தி 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் அடங்கிய குழுவினர் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மீண்டும் அவர்கள் வரவுள்ளனர்.
இந்த நிலையில் இன்று எஸ்டிபிஐ கட்சியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதன் தலைவர் தெஹ்லான் பாகவி தலைமையிலான குழு திமுக குழுவை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெஹ்லான் பாகவி பேசினார். அப்போது அவர் கூறுகையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசினோம். இதில் பேச்சுவார்த்தை முடியவில்லை.
நாங்கள் சில தொகுதிகளை கேட்டிருந்தோம். அவர்கள் சில தொகுதிகளைக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்குள் நாங்கள் பேசி விட்டு மீண்டும் வருவோம். மீண்டும் பேச்சுவார்த்தைத் தொடரும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு காணப்படும். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்சினை எதுவும் இல்லை என்றார் பாகவி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications