நீங்க ராஜ்யசபா சீட் பெறவும் மத்திய அமைச்சர் பதவி பெறவும் உதவியவர் கருணாநிதிதானே..
வன்னிய சமுதாயத்தின் காவலனாக தொன்று தொட்டு நின்று வரும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குறை சொல்ல இந்த சமுதாயத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை.
மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் அன்புமணி. மத்திய அரசு பணியில் வன்னியர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பற்றி என்றைக்காவது அவர் கோரிக்கை வைத்தது உண்டா? அது போகட்டும் வன்னியர் சமுதாய நலனிற்காக என்றைக்காவது ஒரு நாள் பாராளுமன்றத்தில் இவர் பேசியதுண்டா?

தமிழுக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்கிறார் அன்புமணி ராமதாஸ். இதோ அவரது தந்தை, கருணாநிதி சமச்சீர் கல்வி கொண்டு வந்தபோது பாராட்ட வில்லையா? அக்கல்வியை அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்று கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சி என்பது அன்புமணிக்கு ஞாபகம் இல்லையா? ஏன் அவரது தந்தை "செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. கருணாநிதி முதலமைச்சராக அதை நல்ல முறையில் செய்தார்" என்று பாராட்டினாரே அதையும் அன்புமணி மறந்து விட்டாரா?
ஏன் டாக்டர் அன்புமணி ராஜ்யசபா சீட் பெறுவதற்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வருவதற்கும் உதவி செய்தவர் தலைவர் கருணாநிதிதான்.. தி.மு.க.வை விமர்சிக்கும் முன்பு அதை தன் நெஞ்சில் கைவைத்து ஒரு முறை யோசித்துக் கொள்ள வேண்டும். அப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானவர் என்ன செய்தார்?
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications