ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் திமுக... அலங்காநல்லூரில் டிசம்பர் 28ல் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம்!
சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்தக் கோரி அலங்காநல்லூரில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதியன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி டிசம்பர் 28ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மதுரை அலங்காநல்லூரில் எனது தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும். திமுக ஆட்சி இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றார்.

முன்னதாக அவர், "இந்த மண்ணின் மைந்தர்களின் உணர்வையும், பெருமைகளையும் வெளிப்படுத்தும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் 2009 என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், ‘‘தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் போட்டிகள் நடத்தப்பட்டன'' என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதிமுக அரசின் அலட்சியமே இதற்கு காரணம்" என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications