மாப்பிள்ளைக்கு காக்கா.. வைரமுத்தால் திமுகவுக்கு பிரயோஜனம் கிடையாது, நட்டம் தான்.. திமுக ஆதரவாளர்
சென்னை: இன்றைக்கு கூட ஸ்டாலினை சந்தித்தை பதிவிட்டிருக்கும் வைரமுத்து மாப்பிள்ளையோடு சந்தித்ததாக பதிவிட்டிருக்கிறார். வைரமுத்து திமுகவை, மாப்பிள்ளையை காக்காய் பிடிப்பதால் அவருக்கு பிரயோஜனம் இருக்கலாம் . ஆனால் வைரமுத்தால் திமுகவுக்கு கால் பைசா பிரயோஜனம் கிடையாது , மாறாக நட்டம் தான் உண்டு . திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என திமுக ஆதரவாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக எளிதாக ஜெயிக்கும் என்று பலர் நம்பிக்கொண்டிருந்தனர். திமுகவினர் பலமாக நம்பினார்கள். காரணம் இல்லாமல் இல்லை. திமுக எதிர்ப்பு ஓட்டுகளை விஜய்யின் தவெக பிரிக்கும், அப்படி பிரித்தால், அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாது, தோற்றுப்போகும் என்றே நம்பினார்கள்..அப்படித்தான் கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்தன. ஒரே ஒரு கருத்துக்கணிப்பு மட்டுமே விஜய் தலைமையிலான தவெக அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறியது.

அந்த கணிப்பு வெளியிட்டவரை கழுவி ஊற்றி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்து. அத்துடன் திமுக ஆதரவு கட்சிகளின் ஆதரவுடனே விஜய் ஆட்சியும் அமைத்துவிட்டார். இதனை திமுக தலைமை மட்டுமல்ல.. அக்கட்சி நிர்வாகிகளுமே அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார். பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், திமுக ஆதரவாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில்
திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சாதாரண திமுகவினர் ஒரு பக்கம் தெளிவு படுத்த முயற்சிக்கும் போது திமுக மேல்மட்டமே அவர்கள் வாயை பொத்துவது நடந்து கொண்டு தான் இருந்தது .
கலைஞருக்குப் பின் ஸ்டாலின் வந்ததை இன்றைக்கு எதிர்முகாமே விமர்சனம் செய்வதில்லை. உதயநிதி ஸ்டாலின் வந்த போது பலரும் விமர்சித்தார்கள். அவரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், அதோடு திமுகவின் கொள்கை வழி நிற்கிறார் என சொன்னது கூட குறைந்த பட்சம் அரசியல் புரிதலுள்ளோரிடம் எடுபட்டது .
அதிகாரபூர்வ கட்சியை கடந்து ஒரு கிச்சன் கேபினட் செல்வாக்கு செலுத்துவது கூட தவிர்க்க முடியாது என்றாகி விட்டது. இதைத் தாண்டி சபரீசன் என்பவர் யார்? ஸ்டாலினின் மருமகன் என்பதைத் தாண்டி அவர் கட்சியில் இருக்கிறாரா ? சரி ! கிச்சன் கேபினட்டில் அவருக்கு செல்வாக்கு இருக்கலாம் என்பது உள்ளுக்குள் நடப்பதை புரிந்து கொள்ள முடிகிறது . அதைத் தாண்டி, அதிகார பூர்வ திமுக பொறுப்பாளர்கள் தங்கள் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள அவரை சந்திப்பதோ, வரவேற்பதோ தங்களுக்கும் வைத்துக் கொண்டால் கூட சகித்துக் கொள்ளலாம்.
அதை பொதுவெளியில் சமூக ஊடகத்தில் "மரியாதைக்குரிய மாப்பிள்ளை அவர்களை சந்தித்தேன்" என பதிவது நிச்சயமாக திமுக நம்மைக்காக அல்ல, தன் சொந்த நன்மைக்கே என கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்கும் தெரியும். இதை பார்க்கின்ற பொதுவானவர்கள்கள் குடும்ப ஆட்சி என்ற விமர்சனம் எடுபட்டு, மத்தியில் நாலு ஓட்டு குறையவே வாய்ப்பிருக்கிறது. இது தெரிந்தும் நான் மாப்பிள்ளைக்கு நெருக்கமானவன் என காட்டிக் கொள்ள பதிவிடுபவர்கள் திமுக கட்சிக்காக பணியாற்றுபவர்களாக நிச்சயம் இருக்க முடியாது.
கடைசி நேரத்தில் வில்லிவாக்கத்தில் நேரடியாக இந்த மாப்பிள்ளை பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் முகத்தை காட்டியதும் பொதுவான வாக்களர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி திமுக வாக்குகளை குறைத்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
இன்றைக்கு கூட ஸ்டாலினை சந்தித்தை பதிவிட்டிருக்கும் வைரமுத்து மாப்பிள்ளையோடு சந்தித்ததாக பதிவிட்டிருக்கிறார். வைரமுத்து திமுகவை, மாப்பிள்ளையை காக்காய் பிடிப்பதால் அவருக்கு பிரயோஜனம் இருக்கலாம். ஆனால் வைரமுத்தால் திமுகவுக்கு கால் பைசா பிரயோஜனம் கிடையாது, மாறாக நட்டம் தான் உண்டு. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் " இவ்வாறு கூறியுள்ளார்.

-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications