காஞ்சிபுரத்தில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு திமுக கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு
காஞ்சிபுரத்தில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் திருப்பூர், கோவை, உள்ளிட்ட இடங்களில் தூய்மை திட்டத்தை ஆய்வு செய்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்படுவதாக கூறி அவர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய ஆளுநர் பன்வாரிலால் சென்றார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் தாம்பரத்தை அடுத்த படப்பையில் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
