திமுக-133; அதிமுக- 75; பாமக- 1; தேமுதிக-1; 24 ல்- இழுபறி- அன்புமணி, திருமா தோல்வி: நக்கீரன் சர்வே
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக 133 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்று நக்கீரன் பத்திரிகை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவுக்கு 75 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது நக்கீரன் சர்வே.
தேர்தலையொட்டி டிவி சேனல்களும் பத்திரிகைகளும் தொடர்ந்து கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றன. ஊடகங்கள் சில திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதிமுக ஆட்சியை தக்க வைக்கும் என்றும் குழப்பமான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
தற்போது நக்கீரன் பத்திரிகையும் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 200 பேர் வீதம் 234 தொகுதியில் 46,800 வாக்காளர்களிடம் நக்கீரன் இந்த கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

இக்கருத்து கணிப்பின் முடிவுகள்:
திமுக கூட்டணி - 133
அதிமுக கூட்டணி - 75
பாமக - 1
தேமுதிக - 1
இழுபறி தொகுதிகள் - 24

ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 61% பேரும் வேண்டாம் என்று 39% பேரும் வாக்களித்துள்ளனர்.

யார் முதல்வர்?
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதி- 24.03%; ஜெயலலிதா- 22.05%; விஜயகாந்த்- 7%; அன்புமணி- 4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெல்லும் தலைவர்கள்
மேலும் திருவாரூரில் கருணாநிதி, ஆர்.கே.நகரில் ஜெயலலிதா, உளுந்தூர்ப்பேட்டையில் விஜயகாந்த் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

அன்புமணி, திருமாவளவன் 3-வது இடம்
பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸும், காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவனும் 3-வது இடத்தைத்தான் பிடிப்பர் என்கிறது நக்கீரன் சர்வே.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!











Click it and Unblock the Notifications