மா.செ.க்களுக்கு செக் வைக்கும் கருணாநிதியின் 'உறுதிமொழிப் பத்திரம்' பார்முலா கை கொடுக்குமா?
சென்னை: தி.மு.க.வில் முதல் முறையாக மாவட்ட செயலாளர்களுக்கு செக் வைக்கும் வகையில் உட்கட்சி தேர்தலில் "உறுதிமொழிப் பத்திரம்" என்ற பார்முலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட செயலாளர்களே சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கும் போட்டியிட்டு எம்.எல்.ஏ,. எம்.பிக்களாக, அமைச்சர்களாக "குத்தகை" எடுக்கும் முறைக்கு ஓரளவு முடிவு கட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது.
திமுகவில் உட்கட்சித் தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்ற சில இடங்களில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து அடிதடியில் தொடங்கி அண்ணா அறிவாலயம் பஞ்சாயத்து வரைக்கும் வந்துள்ளது.
தற்போது 'செல்வாக்குமிக்க' "சர்ச்சைக்குரிய" மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த போது ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனமே கால் நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக "மாவட்ட செயலாளர்களாக" கோலோச்சிக் கொண்டிருக்கும் "குறுநில மன்னர்கள்தான்" என்று விமர்சிக்கப்பட்டது.

மா.செ.க்களுக்கு செக்
இதனைத் தொடர்ந்து திமுக மாவட்டங்கள் 34-ல் இருந்து 65 ஆகப் பிரிக்கப்பட்டது. இதனால் கட்சியில் இதுவரை மாவட்ட செயலாளர்கள்தான் எல்லாம் என்ற நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கை திமுக தொண்டர்களிடத்தில் எழுந்தது.

சோர்ந்த தொண்டர்கள்
அதே நேரத்தில் 31 புதிய மாவட்டங்களுக்கும் கூட தங்களது வாரிசுகளைத்தான் மாவட்ட செயலாளர்கள் கொண்டு வருவார்கள்.. இனி மாவட்ட செயலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., எம்.பிக்களாக அமைச்சர்களாக கோலோச்சுவார்களோ என்ற சோர்வும் திமுக தொண்டர்களிடம் ஏற்பட்டது.

அதிரடி நடவடிக்கை
இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் மாவட்ட செயலாளர்கள் தங்களது வாரிசுகள், ஆதரவாளர்களை தயார் செய்து உட்கட்சித் தேர்தலில் களமிறக்க ஆயத்தமான நிலையில்தான் திமுக மேலிடம் அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.

உறுதிமொழிப் பத்திரம்
அதாவது ஏற்கெனவே மாவட்ட செயலாளர்களாக பல ஆண்டுகாலம் இருந்தவர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ சட்டசபை, லோக்சபா தேர்தலிலோ இதர கட்சி பதவிகளோ வாய்ப்பு கேட்க மாட்டோம் என்று கையெழுத்துப் போட்ட உறுதிமொழிப் பத்திரத்தைத் தர வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளது திமுக தலைமை.

18 மா.செ.க்கள் ஏற்பு
இந்த கண்டிஷனையும் ஏற்று தற்போது 18 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்துப் போட்டு உறுதிமொழிப் பத்திரம் கொடுத்துள்ளனர். இந்த 18 பேர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் இந்த பழைய 18 மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்பதால் அந்த மாவட்டங்களில் புதியவர்கள் சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளராவதற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் ஓரளவுக்கு வாரிசு அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டும் உள்ளது.

வேட்பாளர் தேர்வு?
ஆனாலும் மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைப்பவர்கள்தான் வேட்பாளராக முடியும் என்ற தற்போதைய திமுக கடைபிடிக்கும் அணுகுமுறைக்கும் முற்றுப் புள்ளி வைப்பதன் மூலமே மாவட்ட செயலாளர்களும் ஒரு நிர்வாகியே என்ற நிலை உருவாகும். புதியவர்கள், திறமையானவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு அமைச்சர்களாகவும் ஆகவும் முடியும்.

தொடரும் அபாயம்
இல்லையெனில் திமுக தலைமை விரும்புகிற நிலைக்கு மாறாக மாவட்ட செயலாளர்களே மீண்டும் குறுநிலமன்னர்களாகத்தான் தொடருவார்கள் என்பது திமுக தொண்டர்களின் கருத்து.

தலைமைக்கு இடப்பெயர்ச்சி
தற்போது திருச்சி நேரு, திண்டுக்கல் பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, நெல்லை கருப்பசாமி பாண்டியன், வேலூர் காந்தி, திருவண்ணாமலை எ.வ.வேலு என பல மாவட்ட செயலாளர்கள் இப்படி ஒரு உறுதிமொழிப் பத்திரம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு கட்சியில் துணைப் பொதுச்செயலாளர், தலைமை நிலைய முதன்மை செயலாளர் என்ற ஏதேனும் ஒரு பதவி கொடுக்கப்பட்டு விடலாம் எனவும் கூறப்படுகிறது.

வாரிசுகள் கோலோச்சுவர்?
அதே நேரத்தில் இவர்கள் தலைமை நிலையத்திலும் இவர்களது வாரிசுகள் மற்றும் ஆதரவாளர்கள் மாவட்டங்களிலும் கோலோச்சும் வாய்ப்பும் இருக்கிறது என்று சுட்டிக் காட்டப்படுகிறது. இதற்கும் ஏதாவது ஒரு வகையில் கடிவாளம் போட்டால்தான் கீழ்மட்ட திமுக தொண்டர்கள் தங்களது உழைப்பால் அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு வர முடியும் என்ற நிலை உருவாகும் என்பதும் திமுகவினர் எதிர்பார்ப்பு.
-
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
இன்ஸ்டா பிரபலம் தேவா, ஜீவாவை நேரில் அழைத்த முதலமைச்சர்.. அடடா இப்படி ஒரு அட்வைஸ்! வைரல் பின்னணி












Click it and Unblock the Notifications