மீண்டும் திறக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலை? வந்து விழுந்த கேள்வி! திமுக எம்பி கனிமொழி சொன்ன தெளிவான பதில்
தென்காசி: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை காரணமாக அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. மக்கள் நடத்திய பெரிய போராட்டத்திற்கு பிறகு ஆலையை மூட சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஆலையை திறக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் சூழலில், இது தொடர்பாக தூத்துக்குடி எம்பி கனிமொழி முக்கியமான பதிலை அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வந்தது. இருப்பினும், இந்த ஆலையால் மிக கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனால் அந்த ஆலையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அங்கு தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை
இந்தச் சூழலில் தான் கடந்த 2018ம் ஆண்டு மிக பெரிய போராட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமும் சென்றனர். அப்போது சில காரணங்களால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சிலர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.
அந்த ஆலையை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை ஐகோர்ட் அந்த ஆலையை மூட உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டில் அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதேநேரம் ஸ்டெர்லைட் உரிமையாளர் வேதாந்தா குழுமம் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கோரிக்கை
இருப்பினும், அதே பகுதியை சேர்ந்த சிலர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூலமாக இந்த பகுதியில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாகவும் இப்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி முக்கியமான பதிலை அளித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி
தென்காசி மாவட்டத்தில் திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திமுக எப்போதும் தான் எடுத்த முடிவில் உறுதியாகவே இருக்கும் என அவர் பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தொழில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, கல்வியில் தமிழ்நாட்டை முதலிடத்தில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். வரும் சட்டசபை தேர்தலிலும் இது நிச்சயம் எதிரொலிக்கவே போகிறது.
வாய்ப்பில்லை
ஸ்டெர்லைட் ஆலையை சிலர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுக தான் எடுத்துள்ள எந்தவொரு கொள்கை மற்றும் முடிவில் உறுதியாகவே இருக்கும். சிஎம் எப்படி இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கிறாரோ.. அதேபோல நானும் உறுதியாக குரல் கொடுப்பேன்" என்றார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications