For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திரசேகர் ராவ், மமதாவுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை- பாஜகவுக்காக காங்கிரஸை கழற்றிவிடுமா திமுக?

பாஜகவுக்காக காங்கிரஸை கழற்றிவிடுமா திமுக? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் திமுக கழற்றிவிடுமா?- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் திமுக கழற்றிவிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    பாஜகவிடம் இருந்து விலகியே இருந்தது திமுக. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியல் களத்தை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது பாஜக.

    அதிமுகவை கைப்பற்றிய டெல்லி திமுகவையும் விட்டு வைக்கவில்லை. என்னதான் டெல்லிக்கு எதிராக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அப்படி ஒன்றும் தீவிரமாக பாஜக எதிர்ப்பு நிலையை திமுக எடுத்துவிடவில்லை.

    கருணாநிதியுடன் மோடி சந்திப்பு

    கருணாநிதியுடன் மோடி சந்திப்பு

    பாஜகவைப் பொறுத்தவரையில் திமுகவும் அதிமுகவும் தங்களது பிடியில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறது. அத்துடன் காங்கிரஸை திமுக கழற்றிவிட வேண்டும் என்பதற்காகவே கருணாநிதியை பிரதமர் மோடி வீடு தேடி வந்து சந்தித்துவிட்டுப் போனார்.

    ஜெ.வை சந்திக்காத மோடி

    ஜெ.வை சந்திக்காத மோடி

    இத்தனைக்கும் அப்பல்லோவில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்ற நண்பர் ஜெயலலிதாவை கூட பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. ஆனால் கருணாநிதியின் வீடு தேடிப் போனார் பிரதமர் மோடி. இதில் எந்த அரசியலுமே இல்லை... நலம் விசாரிக்க மட்டுமே வந்தார் என்பது நகைப்புக்குரியதுதான். கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலிலேயே காங்கிரஸை கழற்றிவிடத்தான் ஸ்டாலின் தரப்பு விரும்பியது.

    மூன்றாம் அணிக்கு ஆதரவு

    மூன்றாம் அணிக்கு ஆதரவு

    தேர்தலுக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசரின் விமர்சனங்கள் திமுகவுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. திமுக கூட்டணியில் இப்போதுவரை காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருக்கிறது. ஆனால் மூன்றாவது அணி முயற்சிகளுக்கு மீண்டும் மீண்டும் திமுக ஆதரவு தருவதும் சந்திப்புகளை நடத்துவது என்பதும் இரு விஷயங்களை வெளிப்படுத்தாமல் இல்லை.

    கழற்றிவிடும் திமுக

    கழற்றிவிடும் திமுக

    ஒன்று காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியை குறைத்துவிடுவது; மற்றொன்று பாஜகவின் விருப்பப்படியே திமுக செயல்படுகிறது என்பதை காட்டுவது ஆகிய செய்திகளைத்தான் வெளிப்படுத்துகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒன்றும் செல்வாக்கு இல்லை; அதிகப்படியான தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுக்கவே கூடாது என்பது திமுகவினரின் விருப்பம். இதனால் காங்கிரஸையும் கழற்றிவிட்டு கட்சியினரை திருபதிபடுத்திவிடலாம், மற்றொருபக்கம் பாஜகவின் கோபத்துக்கும் ஆளாகமல் இருந்து விடலாம் என்பதுதான் திமுகவின் நிலை என கூறப்படுகிறது.

    English summary
    Sources said that DMK will consider severing ties with the Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X