For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சாவூரில் வெற்றி உறுதி என்கிறார் திமுகவின் அஞ்சுகம் பூபதி

இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி உறுதி என்று தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலையிலேயே நின்று வாக்களித்து வருகின்றனர். தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி சரபோஜி கல்லூரியில் வாக்களித்தார். வாக்களித்துட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுக்கு வெற்றி உறுதி என்று கூறியுள்ளார்.

தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி சரபோஜி கல்லூரியில் வாக்களித்தார். வாக்களித்துட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுக்கு வெற்றி உறுதி என்று கூறியுள்ளார்.

DMK will win by election says Anjugam Bhoopathi

தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தஞ்சாவூரில் அதிமுக வெற்றி பெற்றது. வெற்றி பெற்று எம்.எல்.ஏவான ரெங்கசாமியே மீண்டும் களமிறங்குகிறார்.

தஞ்சாவூர் தொகுதிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ், ஒ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.துரைக்கண்ணு, ஜி.பாஸ்கரன், எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், ப.குமார் ஆகியோர் பம்பரமாக சுழன்று வாக்குகளை சேகரித்துள்ளனர். வாக்காளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துள்ளனர்.

திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி என்ற பெயர் சென்டிமெண்ட் ஆக திமுகவினரை டச் செய்துள்ளது. எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் எம்.எல்.ஏக்கள் படு சுறுசுறுப்பாக வேலை செய்திருக்கின்றனர்.

தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அஞ்சுகம் பூபதி சரபோஜி கல்லூரியில் வாக்களித்தார். வாக்களித்துட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுக்கு வெற்றி உறுதி என்று கூறியுள்ளார். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Brisk polling was witnessed in Thanjavur. M.Rengasamy, AIADMK, and Anjugam Bhoopathy, DMK, are among main contenders in Thanjavur where 14 candidates are in fray.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X