லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ரிபப்ளிக் டிவி சர்வே முடிவை பாருங்க!
Recommended Video

டெல்லி: தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ரிபப்ளிக் டிவி மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு லோக்சபாத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு டிவி சேனல்களும் கருத்துக் கணிப்பை இப்போதே துவங்கியுள்ளனர்.
ஏபிபி டிவி சேனலும் சி வோட்டர் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியாகின.
[இடைத்தேர்தல்.. மீண்டும் சிசிடிவி அஸ்திரத்தை எடுக்கும் டிடிவி ஆதரவாளர்கள்.. கலக்கத்தில் அதிமுக! ]

ரிபப்ளிக் டிவி கணிப்பு
இதேபோல ஒரு ரிபப்ளிக் டிவி மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்து நேஷனல் அப்ரூவல் ரேட்டிங்ஸ் என்ற பெயரில் கருத்துக்கணிப்பை நடத்தின. அதில், தமிழகத்தில் எந்தக் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்பது குறித்தும் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. கன்னியாகுமரி தொகுதியை பாஜகவும், தருமபுரி தொகுதியை பாஜக கூட்டணியில் இருந்த பாமகவும் வென்றன.

அதிமுகவிற்கு இறங்குமுகம்
ஆனால், அதே போன்ற ஒரு மாபெரும் வெற்றியை இந்த முறை அதிமுக பெற முடியாது என்கிறது இந்த கருத்து கணிப்பு. அதேநேரம் கடந்த தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 39 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இம்முறை திமுக அபார வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

திமுகவிற்கு ஏறுமுகம்
இதன்படி, இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் திமுக 28 தொகுதிகளில் வெல்லும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுக 9 இடங்களில் வெல்லக்கூடும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு தொகுதிகளை பெறக்கூடும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எந்த இடத்திலும் வெல்ல முடியாது என்றும் தெரிவிக்கிறது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான், திமுக அங்கம் வகித்து வருகிறது என்பதை இந்த கருத்துக் கணிப்பு கண்டுகொள்ளவில்லை. அல்லது கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்ற கணிப்போடு, கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

திமுகவிற்கு 39 சதவீதம்
வாக்கு சதவீதத்தை பொறுத்த அளவில் திமுகவிற்கு 39.4 சதவீத வாக்குகளும் அதிமுகவிற்கு 23.5 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்பதை இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது பாஜக கூட்டணிக்கு 8.8% வாக்குகள் கிடைக்குமா ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 3.7 சதவீதமாக கிடைக்குமா 24.7 சதவீதம் வாக்குகளே பெறக் கூடும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications