இடைத்தேர்தல்.. மீண்டும் சிசிடிவி அஸ்திரத்தை எடுக்கும் டிடிவி ஆதரவாளர்கள்.. கலக்கத்தில் அதிமுக!
இடைத்தேர்தலுக்காக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீண்டும் சிசிடிவி அஸ்திரத்தை அதிமுகவிற்கு எதிராக கையில் எடுத்து இருக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீண்டும் சிசிடிவி அஸ்திரத்தை அதிமுகவிற்கு எதிராக கையில் எடுத்து இருக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வாரம் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக அதிமுக தரப்பில் இது எல்லோருக்கும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்துகிறாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

ஆதாரம் கொடுப்பதாக சொன்னார்
தனியார் தொலைக்காட்சிக்கு தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில், ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் சந்தித்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் இப்போதும் கூட தினகரனுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் சந்திப்பு நடத்திய இடத்தில் சிசிடிவி கேமரா இருந்தது, அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. நேரம் வரும்போது அதை கொடுப்பேன், என்றுள்ளார்.

இரண்டு தொகுதியில் தேர்தல் நடக்கும்
தமிழக அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடக்க உள்ளது. திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் காரணமாக இப்போது தங்க தமிழ்செல்வன் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இது அதிமுகவில் மீண்டும் பிளவை ஏற்படுத்துமா என்று கேள்வியை எழுப்பி இருக்கிறது.

ஆர்.கே நகர் தேர்தல்
கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இதே போல ஒரு சம்பவம் நடந்தது. அப்போது தினகரன் ஆதரவாளர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார். சரியாக தேர்தலுக்கு முன்பு வீடியோவை வெளியிட்டார். இது தேர்தலில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என்ன நடக்க போகிறது
இந்த நிலையில் அதேபோல் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக இப்படி செய்ய இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஏதாவது சிசிடிவி ஆதாரங்களை வெளியிட இருக்கிறார்களா என்று தெரியவில்லை. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications