நத்தம் தொகுதியில் முதல் முறையாக உதித்த உதயசூரியன்.. உற்சாகத்தில் திமுக
திண்டுக்கல்: நத்தம் சட்டசபை தொகுதியில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்று உதயசூரியனை உதிக்க செய்துள்ளது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டசபை தொகுதியில் 1977 முதல் 2011-ம் ஆண்டு வரை சட்டசபை தேர்தல்களில் திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றதே கிடையாது. 1977-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் ஆண்டி அம்பலம் தான் தொடர்ச்சியாக வென்று வந்தார்.

1996-ம் ஆண்டு அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டும் வென்றார். 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஆண்டி அம்பலத்தின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல் தொடங்கி 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை அதிமுகவின் நத்தம் விஸ்வநாதனே தொடர்ச்சியாக வென்று வந்தார்.
மறைந்த ஆண்டி அம்பலத்தின் மகன் ஆண்டி அம்பலம், 1998-ல் தமாகா வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். 2006 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டு 3,500 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஆண்டி அம்பலம் 29,000 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
தற்போதைய சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் ஆண்டி அம்பலம் களமிறக்கப்பட்டார். அங்கு அதிமுகவின் வேட்பாளராக ஷாஜஹான் நிறுத்தப்பட்டார். நத்தம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் இம்முறை திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அங்கு அவர் தோல்வியைத் தழுவினார்.
நத்தம் தொகுதியில் இந்த தேர்தலில் 2,110 வாக்குகளில் திமுகவின் வேட்பாளர் ஆண்டி அம்பலம் வென்று சாதனை படைத்துள்ளார். நத்தம் தொகுதியில் திமுக இதுவரை வெற்றி பெறாததால் திண்டுக்கல் மாவட்டத்தில், உதயசூரியன் உதிக்காத தொகுதி நத்தம் என கிண்டல் செய்யப்படுவது உண்டு. தற்போது நத்தத்தின் சரித்திரத்தில் உதசூரியன் உதயமாகிவிட்டதாக பெருமிதப்படுகின்றனர் திமுகவினர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications