விஜய்க்கு புரட்சி இளைஞர் பட்டம் தந்த திமுக!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற கவுண்டரின் பொன்மொழி மீண்டும் மெய்யாகிறது, இந்த முறை திமுக - விஜய் விஷயத்தில். 5 ஆண்டுகளுக்கு முன் எதிர் முகாமிலிருந்து விஜய்யுடன், இனிய உறவு பூத்தது என உறவு கொண்டாட ஆரம்பித்துள்ளது திமுக.
விஜய்யின் பிறந்த நாளான இன்று அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் திமுகவின் முக்கிய பிரமுகர், எம்எல்ஏ, மேற்கு சென்னை மாவட்ட திமுக செயலர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஜெ அன்பழகன்.

அதில், "அகில இந்திய அளவில் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு செல்லும் புரட்சி இளைஞர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். #RevolutionaryYouthVijay" என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆங்கிலத்தில், "A very Happy Birthday to #Ilayathalapathy #Vijay. Vijay is a simple man down to earth. An indispensable actor for Kollywood. #HBDDearVIJAY" என்று வாழ்த்தியுள்ளார்.
அகில இந்திய அளவில் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு செல்லும் புரட்சி இளைஞர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
#RevolutionaryYouthVijay
— J Anbazhagan (@JAnbazhagan) June 22, 2015 கடந்த தேர்தலில் திமுகவுக்கு எதிரான வெளிப்படையான நிலை எடுத்த விஜய், தன் தந்தையுடன் போய் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தார். தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எஸ் ஏ சந்திரசேகரன் அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அதிமுக தலைமையுடன் உறவு சுமூகமாக இல்லாத நிலையில், தலைவா படத்துக்கு சிக்கல் வந்தபோது, விஜய்க்கு கை கொடுத்தவர் திமுகவின் ஜெ அன்பழகன்தான்.
இந் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கருணாநிதியின் பேரன் நடிகர் அருள்நிதியின் திருமணத்தில் பட்டு வேட்டிச் சட்டை சகிதமாக வந்து கலந்து கொண்டார் விஜய்.
இந்த நிலையில் புரட்சி இளைஞர் பட்டம் தந்து வாழ்த்தியிருக்கிறார் அன்பகழகன்.
கூட்டிக் கழிச்சிப் பார்த்தா விடை புதுசா வரும் போலிருக்கே!
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications