லோக்சபா தேர்தலில் திமுக 2 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: பொன். ராதாகிருஷ்ணன்
சிவகங்கை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 2 தொகுதிகளில் கூட வெற்ற பெறாது என்று பாஜகவின் தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த திருமண விழா ஒன்றில் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் ஏராளமான தமிழர்களை கொலை செய்து குவித்த ராஜபக்சேவுடன் சேர்ந்து காங்கிரஸ் அரசு செய்த படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் இருக்கும். 10 ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவரது சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மோடியை மட்டும் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர் என்கிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன என்பது அனைவரும் அறிந்ததே. முல்லை பெரியாறு பிரச்சனை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி எல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட அவருக்கு மோடியை பற்றி பேச தகுதியே இல்லை. மோடி பிரதமர் ஆனால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண்பார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவால் இரண்டு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்றார்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார்












Click it and Unblock the Notifications