நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே திமுக செயற்குழு அவசரக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடக்கவுள்ளது.

மு.க.டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் உடனான கூட்டணி, மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது, கட்சியின் அமைப்பில் மாற்றம் செய்வது என்பன உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவசரக் கூட்டம்

அவசரக் கூட்டம்

திமுக செயற்குழு அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிசல்

விரிசல்

காங்கிரஸ் கூட்டணியை தொடர்வதா வேண்டாமா என செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாராம் ஸ்டாலின். அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுப்பது பற்றியும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாம்.

ஒன்றரை ஆண்டு

ஒன்றரை ஆண்டு

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளதால் மண்டல வாரியாக மாநாடுகள் நடத்துவது பற்றியும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல், கட்சியின் அமைப்புகளில் லேசான மாற்றம் கொண்டு வருவது பற்றியும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை

ஆலோசனை

அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக நாளைய தினம் நடைபெறும் செயற்குழுவில் இறுதி முடிவு எடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+