திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலினுக்கு 65-ஆவது பிறந்த நாள்: கருணாநிதியிடம் ஆசி
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video

சென்னை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.
மார்ச் 1-ஆம் தேதி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர்.

பிறந்த நாளையொட்டி இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள தந்தை கருணாநிதி மற்றும் தாய் தயாளு அம்மாளை சந்தித்த ஸ்டாலின் ஆசி பெற்றார். இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார். அவருக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், புதுவை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நேரில் சென்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம்












Click it and Unblock the Notifications