தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் சிவாஜி.. அவரது சிலை கடற்கரையில்தான் இருக்க வேண்டும்.. வைகோ
நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வைகோ கோரியுள்ளார். தமிழர்களின் உணர்வோடு கலந்தவர் நடிகர் சிவாஜி என்பதால் அவரது சிலை அங்கே இருப்பதுதான் சரி என்றும் அவர்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு தடையாக இருப்பதாகக் கூறி கடற்கரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிலையை அங்கிருந்து அகற்றக் கூடாது என்றும் தமிழர்களின் உணர்வோடு கலந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் இருப்பதுதான் சரி என்றும் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை கடற்கரை காமராசர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலையை அகற்றக் கோரிய வழக்கில், சிலையை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.
புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் அந்தச் சிலையை வைக்கப் போவதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்து இருக்கின்றது.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு இணையான நடிகர் அகிலத்தில் வேறு எவரும் இல்லை.
அவருடைய உருவம் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. சென்னைக் கடற்கரைக்கு வருகின்ற இலட்சக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்கின்ற வகையில், தமிழ்நாட்டுக்குப் பெருஞ்சிறப்பைச் சேர்த்துத் தந்த அந்த மாமனிதரின் சிலை சென்னைக் கடற்கரையில் இருப்பதுதான் பொருத்தமானது, தகுதியானது.
சென்னை மாநகருக்குள் எத்தனையோ சிலைகள் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், நடிகர் திலகம் அவர்களுடைய சிலையை மட்டும் அகற்றுவது வேதனையானது.
இருப்பினும், கடற்கரையில் போதுமான இடம் இருப்பதால், ஏற்கனவே உள்ள சிலைகளின் வரிசையிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி, அங்கேயே நடிகர் திலகம் சிவாஜி அவர்களது சிலையை இடமாற்றம் செய்திட வேண்டும் என்றும்;
புதிதாகக் கட்டப்படுகின்ற மணிமண்டபத்தில் மற்றொரு புதிய சிலையை அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications