தமிழகத்தில் தேமுதிக - ம.ந.கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு !
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆம் ஆத்மி கட்சியினரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தி.நகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வைகோ நேற்று சென்றார். அங்கு அந்தக் கட்சியின் நிர்வாகி வசீகரனை சந்தித்து கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தார். அப்போது ஆம் ஆத்மியின் ஆதரவு கேட்டு அதன் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஒரு கடிதத்தையும் அளித்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாரதி, வைகோவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சி தற்போதைய நிலையில் தமிழகத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்க இயலாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், நீங்கள் எழுதிய மார்ச் 31 ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சி தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டங்களாலே ஆம் ஆத்மி கட்சி எழுச்சி பெற்றது உங்களுக்கு தெரியும். இந்திய அரசியலில் ஊழலே பிரதானமாக இருக்கும் நிலையில், அதை அறவே நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது.

எனவே, தற்போதுள்ள அரசியல் செயல்முறைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி விரும்புகிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கோ, கூட்டணிக்கோ ஆதரவு அளிக்கும் இயலாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி உள்ளது.
எங்களது தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications