கோடை வெயிலிலிருந்து தப்பிக்க.. எந்த 'கிரகத்துக்கு' போனா கரெக்ட்டா இருக்கும் தெரியுமா? இதை படிங்க
சென்னை: அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. மறுபுறம் அனல் காற்றும் வாட்டி வதைத்து வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு வேற ஏதாவது கிரகத்துக்கு போயிடலாம்னு தோணுது. ஆனா எல்லா கிரகத்திலும் கோடைக்காலம் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் சென்ட்சியூரி போடுகிறார்களோ இல்லை ஆனால் சென்னையில் வெயில் சதம் போட்டுவிடுகிறது. ஒவ்வொரு நாளும் ஆபீஸ் போய் வீடு வருவதற்குள் அடுப்பு மேல் நடப்பது போல ஃபீல் ஆகிறது. சரி இவ்வளவு வெயில் இந்த பூமியல மட்டும்தானா? இத விட்டு செவ்வாய், வியாழன் அப்படினு வேற கிரகத்திற்கு போயிட்டா பிரச்னை இருக்காது பல பேர் சோஷியல் மீடியாவில் ஐடியா கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் பூமியை விட்டு போனால் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க முடியுமா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்ல ராஜா என்றுதான் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். ஏனெனில் பூமியை போலவே சூரிய குடும்பத்தில் உள்ள 8 கிரகங்களிலும் பருவ காலங்கள் இருக்கிறது. அதாவது கோடைக்காலம், குளிர்காலம், இலையுதிர் காலம் மற்றும் வசந்த காலம் ஆகியவை இருக்கிறது. எனவே இந்த வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்து முதலில் இருக்கும் புதன் கிரகத்திற்கு போகிறீர்கள் எனில் அங்கு உங்களுக்கு நிம்மதி கிடைக்காது."
ஏனெனில் சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம்தான் புதன். அது மிகவும் வேகமாக சூரியனை சுற்றி வருவதால் அங்கு பருவநிலைகள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது அதற்கும் குறைவான காலத்தில் மாறிக்கொண்டே இருக்கும். சரி நமக்கு புதன் வேண்டாம் வெள்ளியிடம் வருவோம் என்று நினைத்தால் அங்கும் ஒரு பிரச்னை இருக்கிறது. அங்கு வெயில் காலம் 55-58 நாட்கள் வரை நீடிக்கும். இந்த கிரகத்தில் சாதாரணமாக வெப்பநிலை 847 டிகிரி பாரன்ஹீட் எனும் அளவில்தான் இருக்கும். அதாவது சென்னையில் நேற்று (மே 15) பதிவான வெயில் 105. இதைவிட 8 மடங்கு வெயில் அங்கு இருக்கும்.
எனவே இங்கு நிச்சயம் உயிர்வாழ முடியாது. எனவே இந்த சம்மர் மட்டுமல்லாது எந்த சம்மருக்கும் அங்கு போக முடியாது. சரி இப்போ அடுத்து இருப்பது செவ்வாய். சூரிய குடும்பத்தில் தரை பரப்பு கொண்டிருக்கும் மிகப்பெரிய கிரகம் செவ்வாய்தான். இது பூமியை விட சைஸில் பெரியது. அதே நேரம் பூமியோ பல விஷயங்களில் ஒத்து போகிறது. ஆனால்! பருவ நிலைகளில் வித்தியாசம் இருக்கிறது. அதாவது, இங்கு பூமியை விட குளிர் அதிகமாக இருக்கும். போகும் போது என்னவோ ஜில்லுனுதான் இருக்கும். ஆனால் போக போகதான் தெரியும் அங்கு வாழவே முடியாதுன்னு.
ஒருவேளை அங்கு செயற்கையான வாழ்விடங்களை மனிதன் உருவாக்கினால் கூட உயிர்வாழ செயற்கை வெப்பம் அவசியமாகும். பூமியில் 90-93 நாட்கள் வரை கோடை காலம் நீடிக்கும். அதே செவ்வாய் கிரகத்தில் சுமார் 7 மாதங்கள் வரை கோடைக்காலம் நீடிக்கம். ஆனாலும் வெயில் அவ்வளவாக இருக்காது. எனவே குளிரிலிருந்து தப்பிக்க செயற்கை வெப்பம் தேவை அதை உருவாக்க ஆற்றலும் தேவை. அதை எப்படி தயாரிப்பது என்பதுதான் கேள்விக்குறி. எனவே இந்த திட்டம் ஓரளவு ஒர்க்கவுட் ஆகலாம்.

சரி அடுத்த கிரகத்திற்கு வருவோம். செவ்வாய்க்கு அடுத்து உள்ளது வியாழன். நமது சூரிய குடும்பத்திலேயே பெரிய கிரகம் வியாழன்தான். இந்த கிரகத்துல கோடைக்காலம் வந்துச்சுனா அது 3 வருஷம் வரைக்கும் இருக்கும். இந்த கிரகத்தை பொறுத்த வரைக்கும் இங்கு குளிர்தான் அதிகமாக இருக்கும். காரணம் இது சூரியனைவிட ரொம்ப தூரத்துல தள்ளி இருக்கு. பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட 5.2 மடங்கு தொலைவுல வியாழன் அண்ணன் இருக்கிறார். எனவேதான் இவ்வளவு குளிர். குளிர்னா கொஞ்சம் நஞ்சம் குளிர் கிடையாது.. இங்கு -238 டிகிரி பாரன்ஹீட் குளிர் இருக்கிறது. அதாவது நீங்க அங்போனாவே உறைந்து போய்விடுவீர்கள்.
அதேபோல இந்த லிஸ்ட்ல இருக்குற அடுத்தடுத்த கிரகங்கள் சனி, யூரேனஸ், நெப்டியூன்தான். இது மூன்றிலும் கோடைக்காலம் தலா 7 ஆண்டுகள், 20 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். ஆனாலும் இதில் குளிர் வியாழனைவிட கடுமையாக இருக்கும். இதை கூட சமாளித்துவிடலாம் ஆனால் இந்த 3 கிரகங்களும் வியாழனை போலவே வாயு கிரகங்கள். எனவே இங்கு நீங்க போய் கால் வைக்க கூட இடம் இருக்காது. எனவே சம்மரை சமாளிக்க வெளிகிரகங்களுக்கு போகாமல் அமெரிக்கா, ஜெர்மனினு போய்ட்டு வாங்க. ஏன்னா அங்க இப்போது குளிர்காலம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications