ஸ்பாட்டுக்கே போயிட்டாரு.. பனை மரத்து உச்சியிலே "முறைக்கிறது" யார்னு பாருங்க.. நொந்துபோன நாகை ஆபீசர்ஸ்
நாகை: கஜா புயலில் இறந்த தனது தாயின் நிவாரண நிதியை தராத அதிகாரிகளை கண்டித்து பனை மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா பனையங்காடை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது அம்மா பெயர், அம்மாளு அம்மாள்,.. இவர் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலில் இறந்துவிட்டார்..

இவர் உயிரிழந்த மறுநாளே, போஸ்ட் மார்ட்டமும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை ராமச்சந்திரன் வாங்கி வைத்திருக்கிறார்.
10 லட்சம் நிவாரணம்: அரசு அறிவித்த, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு 5 ஆண்டுகளாக வருவாய் துறையினரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருக்கிறார். ஆனால் 5 வருடங்கள் ஆகியும் அரசு அறிவித்த ரூ.10 லட்சம் தொகையை வருவாய் துறையினர் வழங்க மறுக்கிறார்களாம்.. இது தொடர்பாக கேட்க போனால், வருவாய்த் துறையினர் பல்வேறு காரணங்களை சொல்லி, நிவாரணம் அளிக்க மறுத்துவிடுகிறார்களா.
இதனால் உச்சக்கட்ட வெறுப்படைந்த ராமச்சந்திரன், மனமுடைந்து போனார்.. பணத்தை தராமல், தொடர்ந்து அதிகாரிகள் அலைக்கழித்து வருவதால், பனை மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள கடிதம் எழுதி, அதை வருவாய்த்துறைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
கடிதம்: அந்த கடிதத்தில் சொன்னபடியே, இன்று காலை 9 மணிக்கு, தோப்புத்துறை ரயில்வே நிலையம் பக்கத்திலிருக்கும், பனை மரத்தோப்புக்கு சென்றார்.. அங்கே 80 அடி உயரமிருக்கும் ஒரு பனைமரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
அரசு அறிவித்த நிவாரணத்தொகையை உடனே வேண்டும், என்று கோஷமிட்டுக் கொண்டே, மரத்தின் உச்சியில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். இதுகுறித்து தகவலறிந்ததுமே, வருவாய்த்துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் விரைந்து வந்தனர்.. பனைமரத்தின் மீது உட்கார்ந்திருந்த ராமச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..
உரிமைத்தொகை: விரைவில் நிவாரண தொகையை கொடுப்பதாகவும் உறுதி தந்தனர். ஆனால் நிவாரணம் கொடுத்தால் மட்டுமே, பனைமரத்தை விட்டு கீழே இறங்குவேன் என்று ராமச்சந்திரன் கறாராக சொல்லிவிட்டார்.. நீண்ட நேரம் போலீசார் பேசியும்கூட, அவர் கீழே இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.. பிறகு, ஒருவழியாக அவரை பனை மரத்திலிருந்து கீழே இறக்கினார்கள்.. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டுவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications