ஆதாரில் முகவரி அப்டேட் பண்ண வேண்டி இருக்கா.. கட்டணம் இன்றி இலவசமாகவே செய்யலாம்.. ஈசி டிப்ஸ்
சென்னை: ஆதார் கார்டில் முகவரி மாற்றம், பிறந்த தேதி உள்ளிட்டவை தவறாக இருந்தால் அதை எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாகவே திருத்தம் செய்து கொள்ள முடியும். வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை இந்த வசதியை ஆதார் ஆணையம் வழங்கியிருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. ஆதார் அட்டை தற்போது நாட்டில் முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்கள் அவசியம் கேட்டு பெறப்படுகிறது.

12 இலக்கங்கள் கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டையில் ஒருவரின் கை விரல் ரேகைகள் முக்கிய தரவுகள் பெறப்படுகின்றன. இதனால் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளியிடம் சேரும் என்றும் போலிகள் தவிர்க்கப்படும் எனவும் கூறும் அரசின் துறைகள் ஆதார் எண்ணையே முக்கியமாக கேட்கிறது. வங்கிக் கணக்கு துவங்குவது முதல் செல்போன் எண்கள் வாங்குவது முதல் அனைத்திற்கும் பிரதான ஆவணமாக ஆதார் எண்களையே கேட்டு பெறுகிறார்கள்.
இதனால் ஆதார் அட்டையில் முகவரி, வயது, பிறந்த தேதி போன்றவை சரியானதாக இருக்க வேண்டியது அவசியம்.ஏனெனில் ஆதாரில் ஒரு தேதியும் பள்ளி சான்றிதழில் போன்ற ஆவணங்களில் ஒரு தேதியும் இருந்தால் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் மறுக்க வாய்ப்பு உள்ளது. இதானால் ஆதார் ஆவணங்களில் சரியான விவரங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ஆதார் மையத்திற்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும். இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை இலவசமாக செய்து கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், மை ஆதார் போர்டலில் மட்டுமே இதை இலவசமாக செய்ய முடியும்.

ஆதார் நேரடி மையங்களில் ஆவண திருத்தங்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். தற்போது ஆதார் அட்டை பெறப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அடையாளம் மற்றும் முகவரியை மீண்டும் சரிபார்க்க ஆவணங்களை ஒருமுறை அப்லோடு செய்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியிருப்பதால் இந்த வசதியை கொடுத்துள்ளது.
இந்த வசதியை பெற வேண்டும் என்றால் https://myaadhaar.uidai.gov.in/ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை கிளிக் செய்து முகவரி ஆவணங்கள் மற்றும் பிறந்த தேதி, வயது போன்றவற்றை அப்டேட் செய்து கொள்ள முடியும். ஜூன் 14 ஆம் தேதி வரை மட்டுமே இதை இலவசமாக செய்ய முடியும். அதற்கு பிறகு ஆன்லைன் மூலம் செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications