அம்மாவின் ரூ.350 சீன போன் வேணுமா? ஐயா கொடுக்கும் ஆன்ட்ராய்டு போன் வேணுமா?: குஷ்பு
நாமக்கல்: அம்மா கொடுக்கும் ரூ.350 மதிப்புள்ள சீன செல்போன் வேண்டுமா? இல்லை கருணாநிதி தரும் ஆன்ட்ராய்டு போன் வேண்டுமா? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் திருத்தணி மற்றும் நாமக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களான ஏ.ஜி. சிதம்பரம், ரா. செழியனுக்காக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா
ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழலும், லஞ்சமுமாக உள்ளது. ஒரு நலத்திட்டங்களை கூட அவர் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் முதுகு எலும்பான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

கல்வி
திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் தயாரித்த தேர்தல் அறிக்கையில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் மாத்திப்போட்டு அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அம்மா கொடுக்கும் ரூ.350 மதிப்புள்ள சீன செல்போன் வேண்டுமா? இல்லை கருணாநிதி தரும் ஆன்ட்ராய்டு போன் வேண்டுமா?

நாமக்கல்
கோழிப்பண்ணைத் தொழில், லாரித் தொழில் ஆகியவை தான் நாமக்கலில் முக்கியான தொழில். மேலும் இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதிமுக ஆட்சியில் மாநிலத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை.

ஊழல்
அதிமுக ஆட்சியில் லாரித் தொழில் முடங்கியுள்ளது. முட்டை ஒப்பந்தத்தில் அதிமுக அரசு ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை ஸ்டிக்கர் ஒட்டி வழங்கிய அரசு அதிமுக அரசு.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications