ஜெ.கன்னத்தில் இருந்த ஓட்டை.. பார்க்கவில்லை என ஏன் சொன்னார் டாக்டர்?.. மனோஜ் பாண்டியன்
ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைகளை பார்க்கவில்லை என்று டாக்டர்கள் சொன்னது ஏன் என மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைகளை பார்க்கவில்லை என மருத்துவர்கள் எப்படி சொன்னார்கள் என மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஓட்டைக்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்து 90 நாட்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான பிஎச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கத்தின் போது தெரியாது என கூறியது ஏன் என கேள்வி எழுப்பினார். மருத்துவர்களுக்கு தெரியாமல் அந்த ஓட்டை வந்ததா என்றும் அவர் கேட்டார்.
ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைக்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதாவை பார்க்க வந்தவர்கள் குறித்த லாக் புக் விவரத்தை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள ஆதாரங்களுடன் எழுப்பியுள்ள கேள்விகள் மீண்டும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications