போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியுடன் யார் யாருக்கு தொடர்பு... கண்காணிக்கும் அதிகாரிகள்
சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய டைரிதான் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகளின் முக்கிய ஆவணமாக உள்ளது.
சென்னை: சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த வாரம் நடந்த வருமான வரி சோதனையில் பெட்டி பெட்டியாக பணம், கட்டி கட்டியாக தங்கம் கைப்பற்றப்பட்டது.
அவரது டைரி எடுத்து சென்ற அதிகாரிகள், ரெட்டியுடன் தொடர்பில் இருந்த 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்களாம்.
இதன் அடிப்படையிலேயே ராம மோகன் ராவ், அவரது மகன், சம்பந்தி வீடுகளில் ரெய்டு நடத்தியுள்ளனர். ராம மோகன ராவின் நேர்முக உதவியாளர்களான சேகர், குமார் ஆகியோரிடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதா இறுதிச் சடங்கு நடைபெற்ற 6ம் தேதியன்று சேகர் ரெட்டியுடன், ராம மோகன ராவ் நீண்ட நேரம் பேசியுள்ளார். அப்போது பண பரிமாற்றம் குறித்து அவர்கள் பேசியதை செல்போன் நிறுவனங்களில் இருந்து பெற்றிருக்கின்றனராம்.

சேகர் ரெட்டியின் டைரி
சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள தகவல்கள், ஆவணங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில், அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் ஆகியற்றில் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோருக்கு சொந்தமானவையும் அடக்கம் என தெரிய வந்துள்ளது. சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய பிரமுகர்கள், மேலும் 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

வீடியோ ஆதரங்கள்
வட மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், மேற்கு மண்டலத்தில் செல்வாக்காக இருக்கும் அமைச்சர் ஒருவர் என 4 அமைச்சர்கள் நெருங்கிய தொழில் தொடர்புகளை சேகர் ரெட்டியுடன் வைத்துள்ளனர். அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் அடிக்கடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த ஆவணங்களையும், வீடியோ ஆதாரங்களையும் திரட்டும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்
ஐபிஎஸ் அதிகாரிகளில் ஏடிஜிபி, ஐஜி உள்ளிட்டோரும் சேகர் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவர்களுடன் நடந்த பண பரிமாற்றங்கள் மற்றும் இதர விவரங்கள் டைரியிலும், ஆவணங்களிலும் இடம் பெற்றுள்ளதாம். சென்னை அருகே உள்ள ஒரு மாவட்ட ஆட்சியருக்கு சமீபத்தில் ஒரு கோடி ரூபாயை அவர் கொடுத்துள்ளார். அதுவும் டைரியில் இடம்பெற்றுள்ளது.

யாருக்கு எவ்வளவு பங்கு
அரசியல் கட்சிகளுக்கு கொடுத்த பணம், தனிப்பட்ட முறையில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை அவர் தெளிவாக எழுதி வைத்துள்ளார். மேலும், புதிய நோட்டுகளை மாற்ற யார் யார் உதவி செய்தார்கள் என்பதையும் அவர் தெளிவாக கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம்தான் அவர் பணத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளார். இதற்கு கூட்டுறவு வங்கியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் அதிக அளவில் உதவி செய்துள்ளனர்.

ரெய்டு தொடரும்
இந்த தகவல்களை எல்லாம் உறுதி செய்து கொண்ட பின்பு அடுத்தடுத்து ரெய்டுகள் நடத்தப்படலாம் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்தடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தும் அதிரடி சோதனை மாநில அரசியலில் பல அதிரடிகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications