வெயில் அடிக்குத்துன்னு.. "இதை" மட்டும் ரோட்டில் பண்ணிடாதீங்க.. போலீஸ் தூக்கிடும்.. ஜாக்கிரதை!
சென்னை: வெயில் காலத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் சாலையில் இளைஞர்கள் புதிய பழக்கம் ஒன்றை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு போலீசார் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. வெயிலின் உக்கிரம் இப்போதைக்கு குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
என்ன செய்கிறார்கள்? :
வெயில் காலத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் சாலையில் இளைஞர்கள் புதிய பழக்கம் ஒன்றை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். அதன்படி சாலையில் பைக்கில் பக்கெட் முழுக்க தண்ணீருடன் செல்லும் அவர்கள் அதை அப்படியே ரோட்டில் தங்கள் மீது ஊற்றி குளிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ரீல் போடவும், லைக்ஸ் வாங்கவும்,. இணையத்தில் பிரபலமாகவும் இப்படி அவர்கள் செய்கின்றனர். இது மிகவும் தவறாகும். சமீபத்தில் தஞ்சையில் இப்படி செய்த 2 பேருக்கு தலா 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சாலையில் பைக்கில் பக்கெட் முழுக்க தண்ணீருடன் சென்று அதை தலையில் ஊற்றி குளித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக சாலையில் குளித்தவருக்கு ₹3500 அபராதம் விதித்தது போக்குவரத்து காவல்துறை. பார்த்திபன் என்ற நபருக்கு அபராதம் விதித்ததோடு போலீசார் சார்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சாலையில் இது போன்ற விஷயங்களில் ஈடுபட கூடாது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, லைக்குகளுக்காக நள்ளிரவில் கிணற்றில் குதிப்பது, சாலையில் படுத்து உறங்குவது, உப்பு கலந்த டீயை அருந்துவது போன்ற விஷயங்களை செய்து இவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

கடுமையான விதிகள்:
டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications