சட்டசபையில் என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.. திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: சட்டசபையில் தன்னை புகழ வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் அந்தந்த கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி தலைவர் குறித்து புகழுரை தெரிவித்து விஷயத்தை பேச ஆரம்பிப்பது வாடிக்கை. அதிலும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதிமுக எம்எல்ஏக்கள் அவரை புகழ்வதில்தான், அதிக நேரம் செலவிடுவார்கள். அதிலும், ஒவ்வொருவருமே வித்தியாசமாக புகழ்வதில் போட்டி போடுவதும் உண்டு.

இதை ஜெயலலிதா தடுத்ததில்லை. சில நேரங்களில் மகிழ்ச்சியை தனது முகத்தில் காட்டிக்கொள்வார். சில நேரங்களில் அமைதியாக இருந்து அதை கேட்பார். இந்த புகழ்ச்சிகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எரிச்சலை தருவதோடு, தமிழக சட்டசபையின் நேரத்தை வீணடிப்பதை போல இருந்தது.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தன்னை திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் புகழ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவரை புகழ்ந்து பேசுவதால் நேரம்தான் விரையமாவதாக குறிப்பிட்டுள்ள அவர், பட்ஜெட் தொடர்பான ஆக்கப்பூர்வ விவாதத்தில் மட்டும் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை மட்டுமே பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications