வெற்றி தோல்வி சகஜம்தான்... தொண்டர்களே... தற்கொலை வேண்டாம்..!- விஜயகாந்த்
சென்னை: அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், அதற்கு தற்கொலை தீர்வாகாது. அதனால், தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபட வேண்டாம் என்று விஜயகாந்த் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தி.மு.க. 98 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக அமைந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில், தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட அனைவரும் வாஷ் அவும் ஆனதோடு டெபாசிட்டையும் பறிகொடுத்தனர்.

தே.மு.தி.க. தோல்வியை சந்தித்ததையடுத்து, மனமுடைந்த கடலூர் மாவட்டம் கொங்கராயனூர் கிளைக்கழக தே.மு.தி.க. செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்,அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், அதற்கு தற்கொலை தீர்வாகாது. தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்க தே.மு.தி.க. மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் வாக்களர்களுக்கு பணத்தை கொடுத்து பொய்யான வெற்றியை பெற்றிருக்கின்றன" என்றும் விஜயகாந்த் கூறி உள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications