கார்டு இருக்க கவலை எதற்கு? அவசரப்பட்டு வங்கிகளுக்கு ஓடாதீர்கள்.. ஏழைகளுக்கு வழி விடுங்கள்!
சென்னை: பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அந்த இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.
இந்த வசதி வரும் டிசம்பர் 30ம் தேதிவரை செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மாத காலம் இது. அப்படியும் முடியாவிட்டால், மார்ச் 31ம் தேதிவரையும் கூட மாற்றிக்கொள்ளலாம். மேலும், விடுமுறை தினங்களில் கூட வங்கிகள் திறந்திருக்க பணிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சலுகைகள் இருக்கும்போது ஏன் இந்த அவசரம்? எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதில் என்ன நன்மை இருக்கும்? அதிலும் குறிப்பாக ஏழை, எளியவர்கள் தங்களிடமுள்ள சிறிதளவு 1000, 500 ரூபாய்களை மாற்றிக்கொள்ள மிடில் கிளாசும், அப்பர்-மிடில் கிளாசும் கொஞ்சம் விட்டுத்தான் கொடுங்களேன்.
ஏனெனில் இப்போதெல்லாம், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாத மிடில் கிளாஸ் கிடையாது. கார்டுகளை பெரும்பாலான வணிக நிறுவனங்களும், மருத்துவமனைகளும் ஏற்கவே செய்கின்றன. எனவே அப்படிப்பட்டவர்கள் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். அவசரப்பட்டு வங்கிகளுக்கு சென்று, சில்லரை தேவைப்படும் ஏழைகளை காக்க வைக்க வேண்டாமே?
அவசர தேவைக்கு ஆயிரம் ரூபாய்க்கு உள்ளே சில்லரை இருந்தால் போதும். பொறுமையாக சென்று நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் சென்னையில் வெள்ளம் வந்தபோது மக்கள் எப்படி உதவிகரமாக இருந்தார்களோ அதேபோல இப்போதும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications