கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள்.. ஸ்டாலின் வேண்டுகோள்!
கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மூன்றாவது நாளாக இன்றும் குன்றியுள்ளது. இதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் அரசியல் கட்சியினர் பலரும் கருணாநிதி குறித்து நலம் விசாரிக்க கோபாலபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
திமுக தொண்டர்களும் கோபாலபுரத்திற்கு குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டாலின் அறிக்கை
அதேநேரத்தில் கருணாநிதி உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்களும் பரவி வருகின்றன. இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து அவரது மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,

வதந்திகளை நம்பாதீர்கள்
கருணாநியின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகளை கட்சித் தொண்டர்களும் கட்சி சார்பற்ற முறையில் கருணாநிதி உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்து வரும் அனைத்து தரப்பு மக்களும் நம்ப வேண்டாம்.

24 மணி நேரம் சிகிச்சை
தொடர் சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

தவிர்க்கவேண்டும்
மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கழகத் தோழர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

செவி மடுக்க வேண்டாம்
விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம். அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications