மீட்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்கா செல்கிறது...திங்களன்று ஆய்வு நடத்த முடிவு
சென்னை : மாயமாகி விபத்துக்குள்ளான டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப முடிவு செய்துள்ளதாக கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி.ஷர்மா தெரிவித்துள்ளார்.
அதில் உள்ள தகவல்கள் சேகரிக்கப்பட்டு விபத்துக்கான காரணம் அறிய ஒரு வார காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

ஆபரேஷன் ஆம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் கடலூருக்கு 27 கடல்மைல் தென்கிழக்கில், காரைக்காலுக்கு 32 கடல் மைல் வடகிழக்கில் பயணித்த போது திடீரென்று மாயமானது.
அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, பார்வையாளர் சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேரும் மாயமானார்கள். இதையடுத்து, கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடும் பணியை தொடர்ந்தன.
இந்த நிலையில் கடலூர் அருகே உள்ள பிச்சாவரம் கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டி கடந்த 11 ஆம் தேதி மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளதால் அதை தயாரித்த கனடாவுக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கருப்பு பெட்டியை ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப உள்ளதாக கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி.ஷர்மா தெரிவித்துள்ளார். திங்கட் கிழமை கருப்பு பெட்டியை ஆய்வு செய்யும் பணி தொடங்கும் என்றும், அதில் உள்ள தகவல்கள் சேகரிக்க ஒரு வார காலம் ஆகும் எனவும் அவர் கூறினார்.
கருப்பு பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது ஏன் என்ற மர்மம் விலகும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications