ராம்குமார் உடலை பார்க்க டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி மறுப்பு… போலீசார் கெடுபிடி
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ராம்குமாரின் உடலை பார்க்க வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராம்குமார் உடலை பார்க்க போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார். ராம்குமாரின் உடலை பார்க்க கிருஷ்ணசாமிக்கு அனுமதி கிடையாது என்று மறுத்துள்ள போலீசார், பெற்றோர்கள் தவிர வேறு யாருக்கும் ராம்குமாரின் உடலை பார்க்க அனுமதிக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இதனிடையே, ராம்குமாரின் மரணத்தில் மர்மம் நிலவி வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications