அவசர சட்டம் கொண்டு வந்தாவது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ்
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அவசரச் சட்டம் கொண்டு வந்தாவது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் இந்நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு பதிலாக சிதைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இவை ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தடை விதித்தது. தமிழக அரசின் சார்பில் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து, காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை விசாரணையின் போது நிரூபித்திருந்தால் கடந்த ஜனவரி மாதமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியிருக்க முடியும்.
ஆனால், 19.05.2014 அன்று மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு, அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் கடந்த ஜனவரி மாதம் வரை அம்மனுவை விசாரணைக்கு கொண்டு வரவில்லை. அதனால் தான் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. அதன்பிறகாவது மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு கொண்டு வந்திருந்தால் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
மற்றொரு புறம், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி சட்டம் இயற்றினால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்பதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால், கூட்டத் தொடர் முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அது சாத்தியமற்றது.
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும். அன்புமணி கடந்த 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்ற பிரதமரும், இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை இம்முறை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வாய்ப்பில்லா விட்டாலும் அவசர சட்டத்தை கொண்டு வந்தாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications