தனியார் மூலம் மணல் விற்பனை: ராமதாஸ் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஒட்டுமொத்த குவாரிகளையும் தனியாருக்கு தாரை வார்க்க முன்வந்தபோது அதனை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தியது. ஆனால் தற்போதைய அரசு மணல் விற்பனை தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தனியாருக்கு மணல் விற்பனை உரிமை வழங்கப்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ராமதாஸ் தனியார் மூலம் இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையங்களை அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications