நிவாரணப் பொருட்களை வழங்குவதில் மலிவான, மட்டமான அரசியல்... ராமதாஸ் சாடல்
கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதில் மலிவான அரசியல் நடப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:

கடலூரில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தங்களால் முடிந்த சிசிக்சை உதவிகளை அளிக்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க அரசு பாதுகாப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். மழை நீர் வடியும் தருவாயில் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு, கொசுத் தொல்லையால் டெங்கு, மலேரியா, உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.
மருத்துவ முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டால் பெரியர்வர்களும் சேர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை கொண்டுவரும் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுகின்றனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் வழியிலேயே கொள்ளையடிக்கப்படுகிறது. இது மலிவான, மட்டரகமான அரசியல் ஆகும். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கையைச் சரிசெய்து கொள்ளவேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களை பெற்று முதல்வரின் படத்துடன் அரசு வழங்குவதைப்போல அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளையும், மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications