மோடிக்கு 'ரொம்ப லேட்டாக' ராமதாஸ் வாழ்த்து! ராஜபக்சேவுக்கு அழைப்பு பற்றி பேசவில்லை!!
சென்னை: நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்தது பற்றி ராமதாஸ் எதுவும் பேசவில்லை எனத் தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

இந்தியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று காலை 9 மணிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தொலைபேசி உரையாடலின் தொடக்கத்தில் ராமதாஸுக்கு நரேந்திர மோடி தமிழில் வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து மோடியிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், "இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவிருக்கும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன் என்ற உங்களின் மந்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள்.
உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
வாழ்த்துக்களுக்காக டாக்டர் ராமதாஸூக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை மோடி அழைத்தது பற்றி இந்த தொலைபேசி உரையாடலில் ராமதாஸ் எதுவும் தெரிவித்ததாக பாமகவின் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ரொம்ப தாமதம்..
மே 16-ந் தேதியன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அன்று காலையிலேயே பாரதிய ஜனதாவின் தனிப்பெரும்பான்மை வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் தருமபுரியில் பாமகவின் அன்புமணியும் வென்றுவிட்டார்.
ஆனாலும் பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவிக்காமலேயே இருந்தார். எதிர்க்கட்சியான திமுக கூட்டணி தினமும் ஒரு வாழ்த்தை மோடிக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பாமக நிறுவனர் அமைதி காத்து வந்தார்.
இதற்கு காரணம், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காது என்ற தகவலைத் தவிர வேறொன்றுமில்லை. தேர்தலில் ராமதாஸ் பெரிதாக ஒன்றும் பிரசாரமும் செய்யவில்லை. பாமகவினரும் கூட்டணிக்காக தேர்தல் வேலைகள் செய்யவும் இல்லை என்பது பாஜகவுக்கும் தெரியும்.
அதனால் கொஞ்சம் விட்டுப் பிடிப்பது என்ற கொள்கையோ அன்புமணிக்கான அமைச்சர் பதவி விவகாரத்தில் பிடிகொடுக்காமல் பதில் சொல்லி வருகிறது பாஜக. இந்த நிலையில்தான் ஒரு வாரம் கழித்து மோடிக்கு ராமதாஸ் போன் போட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications